வேலூர்மாவட்டம்,பொன்னையிலிருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் செல்லும் பகுதியில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் களப்பணி குழு தலைவர் திவாகர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து அப்பகுதியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் சாலையில் சீனிவாசபுரம் என்ற கிராமம் அருகில் சாலை ஓரமாக 12 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை பார்த்து கைப்பற்றினர். இந்த சோதனையின் போது 12 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை திருவலம் கிடங்கில் 502 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்து திருவலம் உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
