உத்தமபாளையம் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி துறையினர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையை சீரமைக்காமல் விட்டுசெல்லும் அவல நிலை காணப்படுகிறது. உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயலால் வயதானவர்கள் முதல் பள்ளிக் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,சாலையை சீரமைக்காததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கீழே விழும் வண்ணம் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற பொதுமக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகளை உத்தமபாளையம் பேரூராட்சியின் செயல் அலுவலர் கண்டும், காணாமலும் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும், உத்தமபாளையத்தில் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள், நகர்நல சங்கங்கள் மக்களை அவதியடைய செய்யும் இந்த நிகழ்விற்கு குரல் கொடுக்காமல் உள்ளது வருத்தமளிப்பதாக உத்தமபாளையம் நகர் மக்கள் புலம்புகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தமபாளையம் மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)