வேலூர் அடுத்த ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
9/04/2024
0
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேலூர் அறிவியல் இயக்கத் தலைவர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இதில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் மணிமேகலை மற்றும் லட்சுமி பிரியா கலந்து கொண்டு சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், பாகாயம் ரோட்டரி தலைவர் செல்வம், வேலூர் ஸ்டார் ரோட்டரி தலைவர் எழிலரசன், வேலூர் ரோட்டரி செயலாளர் எம்பெருமான், வேலூர் ரோட்டரி இணை செயலாளர் பிரபாகரன் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியை காயத்ரி, ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட 400 மாணவிகள் கலந்து கொண்டனர்.
