கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக கிருஷ்ணகிரியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி என்ற இடத்தில் மிக பிரமாண்டமான முறையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் இந்த மருத்துவமனையில் ஆவின் மூலமாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்
ஆவின் பாலம் அமைக்கப்பட வேண்டும்என்றகோரிக்கையடுத்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் கட்டிடம் கட்டுவதற்கான
பூமி பூஜை நடைபெற்றது ஆவின் நிர்வாக மேலாளர் திரு.சுந்தரவடிவேல் தலைமையில் நடைபெற்றது,
இப்பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்,அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் திருமதி.பூவதி, தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் திரு.ராம் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

