திருவாரூர் மாவட்டத்திலிருந்து 1250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடிக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பிரித்து அனுப்பப்படுகிறது.என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
