வேலூர்: மாமனாருடன் மது குடித்த மருமகன் பரிதாப பலி!
9/05/2024
0
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது(30). இவரது மாமனார் சம்பத். இருவரும் சேர்ந்து உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்றனர். அங்கு சுடுகாட்டில் இரவு 7 மணி அளவில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து சம்பத் அங்கிருந்து சென்று விட்டார். சீனிவாசன் மறுநாள் காலை அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
