வேலூர்:பேருந்து வசதி வேண்டி வேலூர் கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு

sen reporter
0

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.டி.ஆர்.ஒ. மாலதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணைச்செயலாளர் ஜெனிபர் மற்றும் கிராம பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 40 ஆண்டுகளாக 11-D அரசு பேருந்து வேலூர் ,அரியூர், ஸ்ரீபுரம், பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், தொரப்பாடி, சோழவரம், நாகநதி‌ வழியாக அமிர்தி சென்று வந்தது. ஆனால் கடந்த 8:09:2021 ம் ஆண்டு முதல் வேலூர், தொரப்பாடி, சித்தேரி பென்னாத்தூர், சோழவரம் வழியாக அமிர்தி செல்லுமாறு மாற்று வழி தடத்தில்  இயக்கி கொண்டு உள்ளனர்.அதனால் அமிர்தி ,நாகநதி, சோழவரம் பகுதியில் இருந்து ஸ்ரீபுரம் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் இது நாள் வரை சென்று வந்த பேருந்தை மாற்று வழி தடத்தில் இயக்குவதால் மிகுந்த சிரமமும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறோம். இதனால் ஸ்பார்க் ஸ்கூல் மற்றும் நாராயணி ஹாஸ்பிடலுக்கு சென்று வந்த மக்கள், படிக்கும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். மேலும் ஸ்ரீபுரம் கோவிலுக்கு கிராமப்புறத்தில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். அது மட்டும் இன்றி ஸ்ரீபுரத்தில் இருந்து காலை மற்றும் மாலை சுமார் 200- க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பென்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்த நிலையில் தற்போது பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.25A நஞ்சுகொண்டாபுரம் பேருந்து கொரோனா நேரத்தில் இயக்காமல் நிறுத்திய பின்பு மீண்டும் இந்த தடத்தில் இயக்கவில்லை மதியம் 1.05 மணிக்கு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கணியம்பாடி வழியாக  நஞ்சுகொண்டாபுரம்,செல்லும் பேருந்து இராணிப்பேட்டை மாவட்டம் ,முத்து கடைக்கு மாற்றி இயக்கி வருகின்றனர். 25.A காலை 5-30 க்கு கீழ் அரசம்பட்டு வழியாக செல்ல வேண்டும்.13-D நாக நதியில் இருந்து வேலூருக்கு காலை 5-10 க்கும்,மாலை 4-50க்கும் இயங்கவேண்டும் என்றும் கிராமப்புற பேருந்துகள் போதிய பராமரிப்பு  இல்லாமல் இயக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top