வேலூர்: வேப்பம்பட்டில் பனை விதைகள் நடவு மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை!
10/01/2024
0
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி வட்டம், வேப்பம்பட்டு ஊராட்சி, வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு அரசின் நீர் நிலைகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேப்பம்பட்டு ஏரியில் பனை விதைகள் நடவை தொடங்கி வைத்து, பனை விதைகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா கமல்பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, பூம்பாவை, எழிலரசன். உதவி செயற்பொறியாளர் (ஊராட்சிகள்) கவிதா. சமூக தினேஷ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.