தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பேருந்தை மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரின் அலட்சியமாக எந்த ஒரு அறிவிப்பு பலகையும், தடுப்புகள் அமைக்காததாலும், மேலும் தரமான முறையில் பணிகள் செய்யாத காரணத்தால், இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்வதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை:பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பேருந்து அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் அவதி !!!
4/30/2025
0
கோவை, சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு எதிரே பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த ஆழமான குழியில் அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது. இந்தச் சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி அவதி அடைந்தனர். இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், பேருந்தின் பின்பகுதி குழியில் இறங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
