கோவையில் குனியமுத்தூர் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 34 சரவன் நகை கொள்ளை !!!
May 04, 2025
0
கோவை, குனியமுத்தூர் அண்ணாம நாயக்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (வயது 35 ). இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவாவிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு சுற்றுலா முடிந்து மீண்டும் நேற்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த தங்க சங்கிலி, வளையல், பிரேஸ்லெட், உள்பட 34 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மோகனகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.