வேலூர்:கோழி வீட்டு வாசலில் மேய்ந்ததில் தகராறு: இளம்பெண்ணை 6 பேர் கும்பல் தாக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதி!!!
5/04/2025
0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி (36). கணவர் பெயர் அன்பு. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளி(45), அவரது மனைவி அனிதா (38), சஞ்சய் (19), அஜய் (18), விஜய் (17), வேண்டா ( 60). இவர்கள் அனைவரும் சேர்ந்து வடிவேல் வீட்டு கதவைத் தட்டி உங்களுடைய கோழி எங்கள் வீட்டு வாசலில் மேய்ந்து விட்டது. நீ உடனே வெளியே வா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு உன்னை ஒழித்து கட்டி விடுவேன் என்று கூறி கூச்சலிட்டுள்ளனர். அத்துடன் வெளியே வா என அதட்டி மிரட்டி அவரது வீட்டு வாசலில் உரத்த குரலில் சத்தம் போட்டுள்ளனர். சத்தத்தை கேட்ட அவருடைய தங்கை நிஷாந்தி என்பவர் அங்கு வந்து பார்த்த பொழுது வெளியில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து கும்பலாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி திட்டிக் கொண்டிருந்தனர். அதை தட்டிக் கேட்டதற்கு நிஷாந்தி என்பவரை அவதூறு வார்த்தைகளால் பேசி, தடியாலும், இரும்பு ராடாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் அவருக்கு பலத்த உள் காயம் ஏற்பட்டது. இதனால் தலை, மண்டைஓடு, மூக்கு, முதுகு தண்டு வடம் உடைந்து நிஷாந்திக்கு 5, தையல் போட்டுள்ளனர். இதையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குடியாத்தம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உரிய விசாரணை நடத்தி நிஷாந்தி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக என்னுடைய கணவர் மற்றும் என் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் முரளி குடும்பத்தார்தான் பொறுப்பு என்று மன வேதனையோடு பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
