கோவை:அவினாசி சாலை பகுதியில் உள்ள ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன, டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறை வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது!!!.

sen reporter
0

மருத்துவ துறையில் அதி நவீன தொழில் நுட்பங்கள்  மிக வேகமான முன்னேற்றத்தை நோக்கி செல்வதாகவும்,குறிப்பாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மருத்துவ துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாககோவைஜி.கே.என்.எம். மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கோவை அவினாசி சாலை பகுதியில் உள்ள  ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன, டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறை வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இந்த புதிய ரோபோட்டிக் முறையில் பல்வேறு நோய்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.தமிழகத்தில் மேற்கு மண்டல அளவில் ரோபோட்டிக் நவீன அறுவை சிகிச்சையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்த ஜி.கே.என்.எம்.மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள்  இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.ஜி.கே.என்.எம்.மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இதில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சார்ந்த பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் பிரவீன் ரவிசங்கரன்,அருள்ராஜ்,சந்திரசேகர்,வெங்கடேஷ்,கமலேஷ்,மற்றும் லதா சுப்ரமணி ஆகிய மருத்துவர்கள் பேசினர்..


புதிய நான்காம் தலைமுறை டாவின்சி ரோபோட்டிக் முறையில் செய்யப்படும் அறுவை  சிகிச்சைகள்   உடலில் மிக குறைந்த அளவில் ஊடுருவுதல், மிகவும் துல்லியமான அறுவை சிகிச்சை,மிக குறைவான இரத்த இழப்பு  மற்றும் விரைவாக குணமடைதல், உள்ளிட்ட சிறப்புகளை சாத்தியமாக்குவதாகதெரிவித்தனர். குறிப்பாக மருத்துவ துறையில் அதி நவீன தொழில் நுட்பங்கள்  மிக வேகமான முன்னேற்றத்தை நோக்கி செல்வதாகவும்,இதனால்  உணவுக்குழாய், நுரையீரல், தைராய்டு, வயிறு, கல்லீரல், கணையம், பெருங்குடல், மலக்குடல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் மற்றும் இருதயம் உள்பட அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும்  மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை வேகமாக அதே நேரத்தில் மிக துல்லியமாக செய்ய இயலும் என நம்பிக்கை தெரிவித்தனர்…

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top