தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.அவர் தனது உரையில், துறைமுகத்தில் வரவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கான சரக்குதளம் - 10 கட்டுமானம் மற்றும் பொது சரக்குகளை கையாளுவதற்கென வடக்கு சரக்குதளம் -4 கட்டுமானம், துறைமுகத்தில் ஏற்கனவே உள்ள சரக்குதளங்களை 15.5 மீட்டர் மிதவை ஆழமாக ஆழப்படுத்துதல் மற்றும் கப்பல்வழித்தடத்தினை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினார். மேலும் அவர், இந்திய பெருந்துறைமுகங்களில் வ.உ.சிதம்பரதனார் துறைமுகம் பல்வேறு பசுமை துறைமுக திட்டபணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் துறைமுகம் முழுமையான பசுமை துறைமுகக் கொள்கையின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளும், ‘பிளாஸ்டிக் இல்லா துறைமுகம்’ என்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அறிவித்ததையும் அவர் சுட்டிகாட்டினார். துறைமுகம் நிலைப்புத்தன்மைமிக்க திட்டபணிகளின் கட்டமைப்பு, சுத்தமான எரிசக்தி. நீர் சேமிப்பு மற்றும் பசுமை கப்பல் போக்குவரத்தை வலுபடுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், துறைமுக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், துறைமுக ஊழியர்களின் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். துறைமுக கலைகுழுவினர்கள், துறைமுக பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டினார்கள்.வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சிறப்புமிக்க இவ்விழாவில் கூடுதலாக NSDSL என்ற நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் துறைமுக மருத்துவமனைக்கு வழங்கிய அவசர பிரிவு சுவாச கண்காணிப்பு கருவியினை (ICU Ventilator) துவக்கி வைத்தார். மேலும் அவர் துறைமுக சுகாதாரவசதியினைவலுபடுத்துவதற்காக இந்நிறுவனத்தின் ஒத்துழைப்பினை பாராட்டினார்.
