ஏலத் தோட்டத்தில் மாணவர்கள் பயிற்சி வகுப்பில் இருக்கும் போது எதிர்பார்க்காத வகையில் கன மழை பெய்ய தொடங்கியது. ஆகையால் மாணவர்கள் மழை புகாத வகையில் பிளாஸ்டிக் ரென் கோர்ட் (Plastic Rain Coat) அணிந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டதால் பேராசிரியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.இந்த பயிற்சி வகுப்புகளில் ஏலக்காய் செடிகளை நேரில் கையில் தொட்ட பார்த்த ஜப்பானிய மாணவர்கள், ஏலக்காய் உற்பத்தி, ஏலக்காய் உற்பத்திக்கான மண், கால சூழ்நிலை, நோய் தாக்குதல் மற்றும் அதற்கான மருந்து தெளிப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். உலகளவில் கேரளாவில் தான் ஏலக்காய் உற்பத்தி அதிகம். ஆகையால் அந்த பகுதிகளுக்கு ஜப்பான் மற்றும் இதர நாடுகளிலிருந்து மாணவர்கள் நேரில் வந்து பயிற்சி எடுத்து செல்கின்றனர்.
தேனி:மழையிலும் ஜப்பான் மாணவர்களுக்கு ஏலக்காய் குறித்து பாடம் எடுத்த போடி விவசாயி!!!
8/07/2025
0
தமிழகம் மற்றும் கேரளாவில் விளையும் ஏலக்காய் குறித்து அறிந்து கொள்வதற்காக ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக மாணவர்கள் கேரளா வந்துள்ளனர்.தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் நடைபெறும் ஏலக்காய் உற்பத்தி குறித்து அறிந்து கொள்வதற்காக இடுக்கி வந்த ஜப்பானிய மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.ஜப்பானில் மிக பழமையானது டோக்கியோ அயோமா ககுயின் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் 1877 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி படிப்புகளைபயின்றுவருகின்றனர். அந்த வகையில் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் ’தமிழகம் மற்றும் கேரள பகுதியில் ஏலக்காய் உற்பத்தி மற்றும் வர்த்தகம்’ குறித்து திட்ட வேலை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக அயோமா ககுயின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் தொடர்ச்சி பூஜிதா தலைமையில் 11 மாணவர்கள் நேரில் பயிற்சிவகுப்புகளைமேற்கொள்வதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு வந்தனர். அங்கு உள்ள கஜானா பாறை ராஜகுமாரி பகுதியில் இருக்கும் ஏலத்தோட்டத்துக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு ஏலக்காய் உற்பத்தி குறித்து முக்கிய வழிமுறைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.முதலில் அங்கு அவர்களுக்கு தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த உழவன் அக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ரூபன் குபேந்திரன் ஏலக்காய் உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து பயிற்சி அளித்தார். அவரை தொடர்ந்து மதுரை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். ஜெகதீசன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, பாடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.