கோவை:தேசிய கைத்தறி தினம் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் அணிந்து கோவையில் மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி !!!
8/07/2025
0
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மாணவிகள் அனைவரும் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் அணிந்து கலந்து கொண்டனர். தேசிய கைத்தறி தினத்துக்கு கைத்தறி ஆடைகள் அணிவதன் மூலம் நம் பாரம்பரியத்தை காத்து வளர்காலம் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தரி நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகளின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரியத் திறன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமும் வழங்கப்பட்டது.கைத்தறி பொருட்கள் உற்பத்தி மற்றும் அதனை பயன்படுத்தும் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் மாணவிகள் ஏற்படுத்தினர்.