சென்னை:நல்லகண்ணுவை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!!!

sen reporter
0

நல்லகண்ணுவின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனவும், இன்று செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை, இயல்பாக சுவாசிக்கிறார் எனவும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலசெயலாளர்முத்தரசன்தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.100 வயது நிரம்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு கடந்த 24 ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.உணவுப்பொருட்கள்சுவாசக்குழாயில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, 'Bronchoscopy' மூலமாக அவை அகற்றப்பட்டன. பின்னர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த 26 ஆம் தேதி செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 27 ஆம் தேதி மீண்டும் அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, அங்கு அவருக்கு அனைத்து சிறப்பு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், நல்லகண்ணுவின் உடல்நிலைகுறித்தும்மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள்சேகர்பாபு,கே.கே.எஸ்.எஸ்ஆர்.ராமச்சந்திரன், மருத்துவக் கல்வி இயக்குநர்தேரணிராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்முத்தரசன்செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த தலைவரின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் கேட்டு வந்தார். இந்த நிலையில், இன்று நல்லகண்ணுவை நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் வணக்கம் கூறிக் கொண்டனர். நல்லகண்ணுவை பார்த்ததும் முதலமைச்சர் வணக்கம் செலுத்தினார். அதனை உணர்ந்த நல்லகண்ணுவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நல்லகண்ணுவின் உடல்நிலை நேற்றை விட இன்று முன்னேறி இருக்கிறது. அவர் படிப்படியாக நலம் பெற்று, குணமாகி இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். நேற்று அவருக்கு மூச்சு திணறல் இருந்து வந்த நிலையில் இன்று இயல்பாக சுவாசிக்கிறார்.இன்று அவருக்கு செயற்கைசுவாசம்கொடுக்கப்படவில்லை. மருத்துவமனையின் முதல்வர் தலைமையில் மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்தும், தீவிர சிகிச்சை அளித்தும் வருகிறார்கள். அவரை பழைய நிலைக்கு கொண்டு வர மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை நன்றியோடு கூறி கொள்கிறேன்'' என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top