தேனி:குப்பையில் வீசப்பட்ட அமெரிக்க குளிர்பானங்கள் சுதேசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிரடி!!!

sen reporter
0

இன்றைய சூழலில் இந்திய மக்கள் பகட்டுக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்து அமெரிக்கவை ஆதரிப்பதை கைவிட்டு சுதேசியாக வாழ வேண்டும் என தேனி விளையாட்டு கழகத் தலைவர்கருணாகரன்கூறியுள்ளார். அமெரிக்காவின்50சதவீதவரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியப் பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்ட கூறியும் தேனி விளையாட்டு கழகம் சார்பில் விழிப்புணர்வுநிகழ்ச்சிநடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேனி விளையாட்டு கழகம் சார்பில் "அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம்", "இந்தியா பொருட்களை உபயோகிப்போம்" என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி விளையாட்டு கழகத் தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் இறுதியில் அமெரிக்க நாட்டின் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் குப்பையில் வீசப்பட்டன.ரயில் நிலையம் எதிரே உள்ள தேனி விளையாட்டு கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தக் கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 'புறக்கணிப்போம் புறக்கணிப்போம் அமெரிக்கா நாட்டின் பொருட்களை புறக்கணிப்போம்’ என்கிற கோஷங்கள் எழுப்பட்டன. மேலும், ‘இந்தியப் பொருட்களை உபயோகிப்போம்’ என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் கொக்கக் கோலா, பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்கள் குப்பையில் ஊற்றிப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேனி விளையாட்டு கழகத் தலைவர் கருணாகரன், "எம்.ஜி.ஆர் கூறியதுபோல், நாம் அனைவரும் எளிமையான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். நாம் சுதேசியாக வாழ வேண்டும். இந்தியாவை மட்டும் நாம் சார்ந்திருப்பதுதான் நல்லது. மக்கள் பகட்டுக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை தவிர்க்க வேண்டும். உணவு முறையிலும் இந்தியாவில் விளையும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நாம் எதை உபயோகிக்கிறோம் என்பதில் மக்கள் கவனமாகஇருக்கவேண்டும்,என்றார்.மேலும் பேசிய அவர், "இந்த வரி உயர்வால் அமெரிக்காவிற்கு பிரச்சனை இல்லை. நமக்கு தான் பிரச்சனை. இங்குள்ள அமெரிக்க நூற்பாலை தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் பேர் வேலைஇழக்கும்நிலைஉருவாகியுள்ளது. இதனை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று கருணாகரன் கூறினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி விளையாட்டு கழக நிர்வாக செயலாளர் கதிரேசன், துணைச் செயலாளர் மணி உள்ளிட்ட இந்தக் கழக நிர்வாக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top