இந்நிலையில் நீண்ட நாட்களாக ராதாகிருஷ்ணன் யானையை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் அதனை பிடிக்க வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ரா உத்தரவிட்டார். இதன்படி கடந்த 5 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் உதவுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக எல்லமலை குறும்பர் பள்ளம் பகுதியில் பரண்கள் அமைத்து, மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுடன் தீவிர தேடுதலில் இறங்கினர்.பின் காட்டு பாதையில் ராதாகிருஷ்ணன் யானை சுற்றி திரிவதை கண்டறிந்த வனத்துறையினர் யானையின் உடம்பில் ஊசியை செலுத்தினர். தொடந்து, கும்கி யானைகளின் உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானை பிடிக்கப்பட்டது. அந்த யானை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கிராலில் அடைக்கப்பட உள்ளது. தொடர்ந்து காலர் ஐடி பொருத்தப்பட்டு, அடர் காடுகளில் மீண்டும் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், “நீண்ட நாட்களாக போராடி வனத் துறையினர் ராதாகிருஷணன் யானையை பிடித்துள்ளனர். தினமும் இரவு நேரங்களில் நாங்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் தூங்கி வந்தோம். இனி மேல் நிம்மதியாக இருப்போம்” என்றனர்.
நீலகிரி:பன்னிரண்டு பேரை தீர்த்து கட்டிய காட்டு யானை ராதாகிருஷ்ணன் பிடிபட்டது!!!
9/24/2025
0
கடந்த 5 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் உதவுடன் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.பன்னிரண்டு பேரின் உயிரை காவு வாங்கிய ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் அடர்ந்த வனப் பகுதிகளால் சூழப்பட்ட மாவட்டமாகும். இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் யானை, புலி, கரடி, புள்ளிமான் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக ராதாகிருஷ்ணன் என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக கூடலூரில் சுற்றி திரிந்து, அப்பகுதி மக்களை அவ்வப்போது தாக்கி வந்தது.இதுவரை கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 12 பேரின் உயிர்களை காவு வாங்கியுள்ளது. ராதாகிருஷ்ணன் யானை பகலில் காபி, ஏலக்காய் தோட்டங்களில் மறைந்து இருந்து, இரவில் கிராமங்களுக்கு நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் தாக்கி வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் இருந்து வருவதாகவும், வனத்துறை அந்த யானை பிடித்து அடர்ந்து காட்டுக்குள் விடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
