இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுநர், மாடு மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக சட்டென பிரேக்கை அழுத்தினார். இதில் பேருந்து நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து வெளியே வர முடியாமல் கூச்சலிட்டனர். பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் போலீசார், காயமடைந்த 14க்கும் மேற்பட்டவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. திருநெல்வேலிதிருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!!
9/09/2025
0
நெல்லை அருகே மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குவதும், சாலையில் நடந்து செல்வோர் மாடுகள் முட்டி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.இதனால் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவ்வாறு மாடுகளை பிடிக்க வரும் ஊழியர்களை மாட்டு உரிமையாளர்கள் தடுப்பதால், இதுபோன்ற விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.இந்நிலையில், மாடு ஒன்றால் அரசு பேருந்தை கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இன்று அதிகாலை (செப்.9) 4 மணியளவில் திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் வடிவேல் ஓட்டி வந்தார். திருநெல்வேலி புறநகர்ப் பகுதியான ஆரோக்கியநாதபுரம் அருகே வந்த போது, மாடு ஒன்று பேருந்தின் குறுக்கே பாய்ந்தது.
