தூத்துக்குடி:புனித ஆரோக்கிய அன்னை திருவிழா தேர்பவனி வழிநெடுகி லும் திரளானோர் வழிபாடு!!!
9/09/2025
0
கயத்தாறில்புனிதஆரோக்கியஅன்னை ஆலயதிருவிழாதேர்பவனிவிமரிசையாக நடைபெற்றது. வழிநெடுகிலும் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் புதுமைநகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த ஆக.30-ந் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தைகளின் சிறப்பு ஆராதனைகளுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை சிந்தனைகள், சிறப்பு ஆராதனைகள், நற்கருணை ஆசீர், அசன விருந்து மற்றும்சப்பரபவனிநடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணி அளவில் பங்குத்தந்தை எரிக்ஜோ தலைமையில் மறையுரை நடைபெற்றது.சிறப்பு வழிபாட்டுக்கு பின்பு ஆலயம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான கிறிஸ்தவர்களும், மாற்று மதத்தினரும் திரண்டிருந்து அன்னைக்கு உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.இந்த தேரோட்த்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனி மீண்டும் ஆலயம் முன்பு சென்றடைந்தது. அங்கு அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இத்திருவிழாவில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
