இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் 77மீ நீளம் கொண்டது. இதில் அதிநவீன நீருக்கு அடியிலான கண்காணிப்பு அமைப்புகள், ஆழமற்ற நீரில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் மற்றும் வாட்டர் ஜெட் சேர்ந்து இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை கப்பலாக இது உருவெடுத்துள்ளது. மேலும், அதிநவீன இலகுரக டார்பிட்டோக்கள் மற்றும் உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளுடன் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படைஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறும்போது, "இந்த கப்பல்நீருக்குஅடியில்கண்காணிப்பு, தேடல்,மீட்புமற்றும்கடல்சார்நடவடிக்கைகள்ஆகியவற்றுக்காகவடிவமைக்கப்பட்டுள்ளது. இது கப்பல் படையில் இணைவதன் மூலம் கடலோர பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான இந்திய கடற்படையின் பலம் வலிமை பெறும்" என்றார்.மீதமுள்ள 6 நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி;இந்திய கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் 'ஆண்ட்ரோத்' ஆச்சரியப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!!!
9/15/2025
0
அதிநவீன இலகுரக டார்பிட்டோக்கள் மற்றும் உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளுடன்இந்தகப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகஇந்திய கடற்படைஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் 'ஆண்ட்ரோத்' இந்தியகடற்படையில்சேர்க்கப்பட்டது. இந்திய கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல்கள் தயாரிப்பு பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியிருந்தது.இதன்படி இந்திய கப்பல் படைக்கு எட்டு நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கடந்த ஜூன்மாதம்இந்தியாவில்முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் அர்னாலா, இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் 'ஆண்ட்ரோத்' இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நீர்முழ்கி எதிர்ப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவை நினைவுகூறும் வகையில் 'ஆண்ட்ரோத்' என்ற பெயர் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலாவது நீர்முழ்கி கப்பலுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாரம்பரியமிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் 'ஐஎன்எஸ் அர்னாலா' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
