இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அன்புமணி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அனுப்பப்பட்டதாகதெரியவில்லை. இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் கட்சி நிர்வாகக் குழுவின் முடிவுபடி கட்சி நடவடிக்கை எடுக்கும்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக் கோரி, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. முதன்முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு ஆக.31 ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்தும் பதில் வரவில்லை. இந்நிலையில், நிர்வாகக் குழு கூடி மேலும் 7 நாட்கள் அன்புமணிக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. இந்தமுறையும்உரியபதிலளிக்கவில்லை என்றால், என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை தற்போது சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.மேலும், கூட்டத்திற்கு பாமகவின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு, "அவர்களுக்கு வேறு வேலை இருப்பதாக என்னிடம் கூறி விட்டனர்என்றுராமதாஸ்பதிலளித்தார். தொடர்ந்து, திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளர் ஒருவர், பெண் கவுன்சிலரின் காலில் விழுந்தது தொடர்பான கேள்விக்கு, "தற்போது பாமக குழு கூட்ட விவாதத்தை பற்றி மட்டும் பேசுவோம். மற்ற கேள்விகளுக்கு வியாழக்கிழமை அன்று நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளிக்கிறேன்" என்று ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம்:அன்புமணிக்கு இன்னும் ஒரு வாரம் தான் அவகாசம் ராமதாஸ் அதிரடி முடிவு!!!
9/03/2025
0
ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில், பாமகவின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்குபதிலளிக்கமீண்டும்காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அப்பா மகன் இடையிலான மோதல் தீவிரமான நிலையில், ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி அன்புமணி கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.இதற்கிடையேராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், 'கட்சி நிறுவனர் ராமதாஸை எதிர்த்துப் பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, சமூக வலைத்தளங்களில் ராமதாஸை அவதூறாக சித்தரித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது' என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
