வேலூர்:செம்மரம் கடத்தி வந்த கார் மோதி முதியவர் உயிரிழப்பு இருவருக்கு போலீசார் வலை!!!

sen reporter
0

செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கார் சாலையின் எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் 70 வயது முதியவர் உயிரிழந்தார்.கே.வி. குப்பம் அருகே அர்ஜுனாபுரம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலை அந்த சாலையில் டெல்லி பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது எதிரே மோப்பெட்டி நோக்கி 70 வயது முதியவர் மணி என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.எதிர்பாராத விதமாக அந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. அதில் முதியவர் மணி சாலையில் தூக்கி வீசிபட்டு படுகாயமடைந்த நிலையில் கார் நிற்காமல் சென்று விடடது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரை துரத்திச் சென்றனர். அதனால், பதற்றமடைந்த கார் ஓட்டுநரும் அவருடன் காரில் இருந்த நபரும் காரை மேலும் வேகமாக ஓட்டிச் சென்றனர்.

திடீரென கோளாறு ஏற்பட்டதால், இருவரும் பசுமத்தூர் ரயில்வே பாலம் அருகே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் காரை துரத்தி சென்ற மக்கள் காருக்குள் செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கே.வி. குப்பம் காவல் துறைக்கும், காட்பாடி வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் காரில் இருந்த சுமார் 500 கிலோ எடை கொண்ட 23 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து படுகாயமடைந்த முதியவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவர் மீதும் செம்மரம் கடத்தல் மற்றும் விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், இது போன்று சட்டவிரோதமாக செம்மரம் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடத்தலில் ஈடுபட்டதுடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இருவரையும் விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிற்க வைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top