மேலும் பேசிய அவர், “இந்திய செயற்கைக்கோள் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, 133 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளோம். அதில், 56 செயற்கைக்கோள் வேலை செய்து வருகிறது. நமது நாட்டிற்கு பாதுகாப்பு மட்டுமல்லாமல்மக்கள்பயன்பாட்டிற்கும் நிறையசெயற்கைக்கோள்வேண்டும். இந்தியவிண்வெளித்துறைவிரிவடைய வேண்டும்என்றநோக்கில்,செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களையும் அரவணைத்து வருகிறோம். கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், ஒன்றிரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் இருந்தது. தற்போது 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது.இந்திய கடற்படைக்காக அடுத்த மாதம் விண்ணில் ஏவவுள்ள புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-7’ கடல் சார்ந்து மட்டுமல்லாமல், புவியை கண்காணிக்கும் வகையிலும் அமையும்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23ஆம் தேதி முதல் அக்.2ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின் போது பக்தர்கள் வருகையை கண்காணிக்க உள்ளோம். அதேபோல, திருப்பதி காடுகளில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையும் கணக்கெடுக்க உள்ளோம்.மேலும், வயோ மித்ரா திட்டத்தில் இயந்திர பெண்மணியை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். அந்த பெண் ரோபோ நாம் பேசுவதற்கேற்ப செயல்படும். இந்த வருடம் டிசம்பர் மாதத்தில், அனுப்பப்படும் முதல் ஆளில்லா ராக்கெட்டில் மனிதருக்குப் பதில் இந்த வயோ மித்ரா பெண் ரோபோவை அனுப்ப உள்ளோம்”என தெரிவித்தார்.
சென்னை:ஆளில்லா ராக்கெட்டை இந்தியா விண்ணில் ஏவுவது குறித்து இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!!!
9/23/2025
0
வயோ மித்ரா திட்டத்தில் இயந்திர பெண்மணியை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.ஆளில்லா ராக்கெட்டைவரும்டிசம்பர்மாதத்திற்குள் அனுப்பதிட்டமிட்டுள்ளதாகஇஸ்ரோ தலைவர்வி.நாராயணன்தெரிவித்துள்ளார்.சென்னை ஆவடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா இன்று (செப்.22) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், முதுகலை மற்றும் இளங்கலையைச் சேர்ந்த 446 மாணவர்களுக்கு பட்டங்களைவழங்கிகௌரவித்தார். அதனைத்தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த அவர், “நாசாவும், இஸ்ரோவும் இணைந்து விண்ணில் செலுத்திய The NASA-ISRO Synthetic Aperture Radar செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல,சூரியனைஆராய்வதற்காக கடந்த ஆண்டு ஆதித்யா எல்-1 அனுப்பப்பட்டது. இதுவரை 13 terabyte Scientific தரவுகளையும் ஷேர் செய்துள்ளோம்.மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் 7 முதல் 8 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முயற்சி செய்து வருகிறோம். முக்கியமாக ஆளில்லா ககன்யான் ராக்கெட்டை வரும் டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன் வெற்றியை தொடர்ந்து, 2027-ல் இந்தியாவில் தயாரித்த ராக்கெட் மூலம், இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி திரும்பிகொண்டுவருவோம்.அதேபோல தனியார்தொழிற்சாலைகளில்5பிஎஸ் எல்விராக்கெட்டுகள்தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில், என் ஒன் என்ற முதல் ராக்கெட் வரும் மார்ச் மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 6500 கிலோ எடையுள்ள கமர்சியல் ராக்கெட் ஒன்றையும் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளோம்”எனத்தெரிவித்தார்.
