தூத்துக்குடி:மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே அரசாங்கம் திமுக அரசு தான்சிபிஎம் பிருந்தா காரத்!!!

sen reporter
0

தமிழக அரசு ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியை எதிர்க்கக்கூடிய ஒரு அரசாங்கமாக தமிழ்நாட்டில் திமுக அரசு உள்ளது. எனவே, தேசிய அளவில் ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கடந்த மாதம் 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேடிசி நகரை சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தை சார்பு ஆய்வாளர் சரவணனும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கோண்டு, சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் என்பவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்த சுர்ஜித்தின் பெற்றோரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று (செப். 11) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர்பிருந்தாகாரத்செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்றைய நவீன காலத்திலும்சாதியவன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்துள்ளது நமது நாட்டிற்கு அவமானம். சாதிய அரசியலால் பாதிக்கப்பட்டவர் இளைஞர் கவின். சாதிய அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் கவின் ஒரு தியாகி. இவரது கொலை வழக்கின் விசாரணையை விரைவாக நடத்தி குற்றம்புரிந்தவர்களு்ககு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். தமிழக அரசு ஆணவப் படுகொலைக்கு எதிராக தனித் சட்டம் இயற்றி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகதிகழவேண்டும். ஆணவப் படுகொலைக்கானசட்டம் என்பதுதேசியஅளவில்நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு சட்டம். பிரதமர் மோடியை எதிர்க்கக்கூடிய ஒரு அரசாங்கமாக தமிழ்நாட்டில் திமுக உள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றம், தேசிய மகளிர் ஆணையம், பல ஜனநாயக அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில், கவின் கொலை வழக்கில் குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஏற்கெனவே கவின் தந்தை முதலமைச்சரை சந்தித்து, கவின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும். மேலும், கவின் தாயார் பணியாற்றும் பள்ளியில் இருந்து, இப்பகுதிக்கு அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,இதில்சாதிரீதியானகும்பலுக்கு தொடர்பு உள்ளது. அவர்களையும் கைது செய்யவேண்டும் என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top