இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.குடோனிலிருந்து தீயை அணைக்கும் போது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தீயானது பரவ தொடங்கிய நிலையில், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தீ பரவி விடக்கூடாது என்பதற்காக கூடுதலான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுதீயைஅணைத்தனர்.இந்த தீ விபத்தால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்கள் மற்றும் பேப்பர் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து கூடல்புதூர்காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டாசு வெடித்த போது தீப்பொறி குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் தீபாவளி நாளில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:பேப்பர் குடோனில் தீ விபத்து ரூபாய் இருபது லட்சம் பொருட்கள் சேதம் மதுரை அருகே விபரீதம்!!!
10/20/2025
0
தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மாநகர் விளாங்குடி அருகேயுள்ள காமாட்சி நகர் பகுதியில் பாண்டி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்களை அடுக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறுசிறு வியாபாரிகளிடம் பெறப்பட்ட பழைய பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு அனுப்பி வைப்பதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென இன்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்களில் அடுத்தடுத்து தீ மளமளவென பரவ தொடங்கியதால் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகினர்.
