மதுரை:முடிந்தது புரட்டாசி இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்!!!
10/19/2025
0
புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், இறைச்சி கடைகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அலைமோதியது.புரட்டாசி மாதம் முடிந்தநிலையில்முதல்ஞாயிற்றுக்கிழமையான இன்று மதுரையில் உள்ள இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. பெரும்பாலானோர் புரட்டாசி விரதம் கடைபிடித்ததால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில், புரட்டாசி மாதம் நேற்று முன்தினம் (அக்.17) முடிந்த நிலையில், நேற்று ஐப்பசி பிறந்தது. கடந்த ஒரு மாதமாக அசைவத்தை தவிர்த்து சைவ உணவை சாப்பிட்டு வந்த அசைவ பிரியர்கள் இன்று காலை முதலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் அனைத்து இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இறைச்சி விற்பனை இன்று காலை முதலே சூடுபிடித்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வஞ்சிரம், திருக்கை, பால் சுறா, பாறை, ஷீலா, சங்கரா மீன் மற்றும் நண்டு, இறால் ஆகியவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட அதிக அளவில்கூட்டம்அலைமோதியதறைச்சி 1கிலோஆட்டிறைச்சி ரூ.1000கோழி ரூ.180வஞ்சிரம் ரூ.650 முதல் - ரூ.700 வரை சங்கரா மீன் ரூ.300 முதல் - ரூ.350 வரைபன்னி சாத்தான் மீன்ரூ.350பாறை மீன்ரூ.350கனவாவகைமீன்கள்ரூ.250நெத்திலி மீன் ரூ.2009 இறால் ரூ. 550நண்டு ரூ.860மேலும், கொடுவா ரூ.640, விலா மீன் ரூ.640, வெள்ள பாறை ரூ.520, நகரை ரூ.470, மண் பாறை ரூ.520, ஊளி ரூ.360, நெத்திலி ரூ.300க்கும்விற்பனைசெய்யப்படுகிறது.அதேபோல், ஆட்டு இறைச்சி மாநகர் பகுதியில் கிலோ ரூ.900 முதல் - 1200 வரை விற்கப்படுகிறது.மீன் விலை அதிகமாக விற்கப்பட்ட போதிலும், அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தொடர்ந்து நாளை தீபாவளி பண்டிகை நாளில் இதைவிட அதிகளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஒரே நாளில் ஏராளமான மக்கள் திரண்டதால் மீன் சந்தை திருவிழா போல காட்சியளித்தது.
