குறிப்பாக, மோடிகுப்பம் பகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலோர் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “தொடர்ச்சியான மழையால் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆண்டுதோறும் விவசாயம் மோசமாக பாதிக்கப்படுகிறது. தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இச்சம்பவம் குறித்து பழனி என்ற விவசாயி கூறுகையில்,"மூன்று மாதங்களாக நாங்கள் வேர்க்கடலை, கம்பு உள்ளிட்ட பயர்களை காப்பாற்றி வளர்த்தோம். அறுவடைக்கு இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருந்த நிலையில், தற்போது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது. அரசாங்கம் இழப்பீடு கொடுத்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், "கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சில பகுதிகளில் விவசாயபயிர்கள்சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட தாலுகா வருவாய் அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் நிலைமையை நேரில் ஆய்வு செய்து சேதத்தைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் எந்தவிதமான நஷ்டத்தையும் சந்திக்காமல் இருக்க, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.
வேலூர்:கனமழை கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு கலங்கி நிற்கும் விவசாயிகள்!!!
10/10/2025
0
கொட்டாற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிரவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. குடியாத்தம் பகுதிகளில் பெய்த கனமழையால்பயிர்கள்சேதமடைந்துள்ளதால்,விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.தமிழக,ஆந்திர எல்லைப் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், ஆந்திரமாநிலம்வழியாகதமிழகத்திற்கு வரும் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தவெள்ளப்பெருக்கின் காரணமாக தனகொண்டபள்ளி, மோடிகுப்பம், மேல்கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களில், சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை மற்றும் கம்பு பயிர்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்கி சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியது.
