இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நீர்வரத்து கால்வாய்களை தூர் வாருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், கோழிகள் உயிரிழப்பு காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ள எங்களை சந்தித்து ஆறுதல் கூறி, தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார்.தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் கோழிகள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உரிய நிவாரணம் கொடுக்கும் என்று நம்புவதாக கதிரேசனின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தேனி:கோழிப்பண்ணையை சூழ்ந்த வெள்ளம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை இழந்து தவிக்கும் விவசாயி!!!
10/18/2025
0
தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்குதயாராகஇருந்தகோழிகள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .கனமழை காரணமாக கோழி பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தேவாரம், கோம்பை மற்றும் பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், இந்த வெள்ள நீர் ஓடைகளில் சீராக செல்ல முடியாததால் அருகே இருந்த விவசாயநிலங்களுக்குள்புகுந்தது. குறிப்பாக தேவாரத்தில் இருந்து மறவபட்டி செல்லும் சாலையில் இருக்கும் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் மழைநீர் தேங்கியதால் தீபாவளி விற்பனைக்காக வளர்த்த ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்தன. இரவு நேரம் என்பதால் பண்ணைகளில் இருந்த கோழிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு, உரிமையாளருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கதிரேசனின் குடும்பத்தினர் கூறுகையில், 'நீண்ட நாட்களாக தோட்டத்தின் அருகே செல்லும் நீர் ஓடையை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தோம். இதை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்டு கொள்ளவில்லை. இதனால் தற்போது மழைநீர் பெருக்கெடுத்து வியாபாரத்திற்கு தயாராக இருந்த கோழிகள் உயிரிழந்து இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
