விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் கடும் போக்குவரத்து, நெரிசல்!!!.

sen reporter
0

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக இன்று அதிகாலை 3 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை சுமார் 50,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குபடையெடுக்கும் மக்களால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடி பகுதியில் கூட்டநெரிசல் நிலவுகிறது.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழையும் விடுமுறை நாட்கள் என்பதால் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பயணிகளின் வசதி கருதி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும் தெற்கு ரயில்வேயும் கூடுதல் ரயில்களை இயக்கி கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்துள்ளது. ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த வாகனங்களில் செல்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, நாகர்கோவில் ஆகிய பெரு நகரங்களுக்கு கார் மற்றும் இரு சக்கரவாகனங்களில்பெரும்பாலோனோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நேற்று இரவு முதல்விழுப்புரம்மாவட்டம்விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்கடும்போக்குவரத்து நெரிசலுடன்காணப்படுகிறது.அதனால்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்,விக்கிரவாண்டிசுங்கச்சாவடிக்கு நேரில் சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்காக இரண்டு புதிய வழிகளை திறக்க உத்தரவிட்டார்.நேற்று மட்டும் 48,000-க்கும் அதிகமான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியைகடந்துசென்றதாகவும், இன்றையதினம்காலை3மணியிலிருந்து மதியம் 12 மணி நிலவரப்படி 50 ஆயிரத்துக்கும்அதிகமானவாகனங்கள் கடந்து சென்றதாகவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். 

அதே போன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் இருவேல் பட்டு என்கிற இடத்தில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பயணிகள்கவலைதெரிக்கின்றனர்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் மிதமான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதே போன்று கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்துநெரிசல்இல்லாமல் வாகனங்கள்செல்கின்றன.இந்நிலையில் இதுபோன்ற தீபாவளி பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி பெரும்பாலோனோர் படையெடுப்பதால் அந்த சமயங்களில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண முறை ரத்து செய்து வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அரசு உத்தரவு பிறப்பிக்கு வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top