வேலூர்:பேரணாம்பட்டு அடுத்த அரவட்லாவில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்!!!
10/12/2025
0
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா ஊராட்சி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி.ராஜகுமாரி வேணு தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர் இ.சின்னபொண்ணு ஏழுமலை முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ.சித்ரா, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி.லலிதா, ஒன்றிய ஆணையர் என்.கே.கெளரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கு.பாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.உலகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் டி.பரந்தாமன், எம்.முரளி, ஆர். இந்திராணி ராமமூர்த்தி, கே.வசந்தி கந்தன், ஏ.லட்சுமி அருள், எம்.ராஜேந்திரன், ஆர்.திவ்யா ரீகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாலாஜி உட்பட பலர் கலந்துற கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் வி.நேதாஜி நன்றி கூறினார்.
