சென்னை:யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 பேர் வெற்றி!! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!!
11/12/2025
0
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 77.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 தேர்வர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக துணை முதலமையச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு 2025-ல் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் பிரகாசித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 155 தேர்வர்கள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த சாதனையாளர்கள் அனைவரும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 தேர்வர்கள் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் (AICSCC) பயிற்சி பெற்றனர். இந்த குறிப்பிடத்தக்க சாதனைகள், ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் இருந்து 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி தமிழகத்தின் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன. இதற்காக உழைத்த அதிகாரிகளை பாராட்டுகிறேன்.வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நேர்காணலுக்கும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற 85 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 155 பேர் வெற்றி பெற்று யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவில் தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2024-ம் ஆண்டில் 48 என இருந்தது 2025-ம் ஆண்டில் 85 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 155 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 77.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கடந்த ஆண்டில் 35.29 சதவீதம் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 54.84 சதவீதமாக அதிகரித்துள்ளது.
