திருவண்ணாமலை: செய்யாறுவெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!!

sen reporter
0

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக எழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் இருந்து வருகிறார். இவரது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, சட்டசபை தேர்தலில் முதல் கட்ட 15 தேர்தல் அறிக்கை குறித்து விளக்கி பேசினர். இதையடுத்து மேனலூர், வேளச்சேரி, பூனைத்தாங்கல் உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு வேட்டி - சேலைகள் வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர் ரெட்டி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூலன் ( எ )பையாகுட்டி, நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் அ.தி.மு.க., பொறுப்பாளர்களான அரங்கநாதன், ‌ அருண், தவமணி, பராசூர் பெருமாள், ஜனார்த்தனன், வெற்றிச்செல்வன், கன்னியப்பன், துரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top